‘அண்ணாத்த’ படத்தில்… சூப்பர் ஸ்டாருடன் அல்டிமேட் ஸ்டார் ‘தல’ சேருகிறார்களாமே..!?

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
ajith rajinikanth - 2026

சிறுத்தை சிவாவால் இந்த மேஜிக் நடக்கப் போகிறதாம்! அண்ணாத்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் இணையப் போவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது!

ரஜினிகாந்த் படத்தில் அஜித் சிறிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. தமிழ் சினிமா உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் நெருங்கிய நண்பர்.

அஜித்தை வைத்து தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இவர் தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சதீஷ், சூரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்து வரும் இப்படத்தில் தல அஜித்தும் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா அஜித்தின் நெருங்கிய நண்பர் என்ற நிலையில், அஜித்தை இப்படத்தில் சிறிய ரோலில் நடிக்க ஒப்புக் கொள்ள வைக்கப் பட்டாராம்! இப்படி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.