திருவானைக் கோவிலில்… கிடைத்த தங்கப் புதையல்! பின்னணி தெரியுமா?

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
thiruvanaikkaval - 2026

நேற்றைய தினம் 26.02.2020 அன்று திருவானைக்காவல் ஆலயத்தின் உள்ளே அரபு மொழி எழுத்துக்கள் தாங்கிய தங்க காசுகள் ஒரு பானையில் கிடைக்கப் பட்டதாக தகவல் கிடைத்து இருக்கிறது ..

இந்திய சரித்திரத்தில் ..அனைத்து படைகளுமே .. மையம் கொண்டு இருந்த இடம் ஸ்ரீரங்கம் என்கின்ற தீவுதான் ..

1743 ஆம் ஆண்டு நிஜாம் – உல் – முல்க் என்கிற ஹைதராபாத் நிஜாம் கர்நாடகா மீது படையெடுத்து வந்தான் .. இவன் ஆர்க்காடு நவாப் உரிமைகளை பறித்து .. முராரி ராவ் கொர்படே விடம் இருந்து திருச்சி கோட்டையை கைப்பற்றி ஆண்டு வந்தான் ..

இவ்வாறாக ஆற்காடும் திருச்சியும் நிஜாம் ஆட்சியின் கீழ் 1748 வரை அவன் இறக்கும் வரை இருந்தது .. அந்தக் கால கட்டத்திற்கு பிறகு எல்லா சண்டை படைகளும் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளேயும் திருவானைக் கோவிலில் உள்ளேயும் புகுந்து பல தொல்லைகள் கொடுத்தனர் ..

thiruvanaikka - 2026

இதை பற்றி விரிவான பதிவு A History of the Military Transactions of the British Nation in Indostan: From the Year MDCCXLV. To which is Prefixed a Dissertation on the Establishments Made by Mahomedan Conquerors in Indostan

என்கிற புத்தகத்தில் Rober Orme என்பவர் நேரடியாக பார்த்து எழுதி இருக்கிறார் !!

இந்தக் கால கட்டத்தில் .ஸ்ரீரங்கம் கோவில் களஞ்சியத்தில் இருந்து சுமார் ஒரு லக்ஷம் ருப்பை பெற்று .. பிரெஞ்சு மற்றும் சந்தாசாஹிப் படைகளின் செலவுகளை சமாளித்தனர் ..

இந்தக் கால கட்டத்தில் நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாம் சம்பளம் மற்றும் படைகளின் செலவிற்கு கொண்டு வந்து இருந்த தங்க நாணயங்களை அவர்கள் தங்கி இருந்து திருவனைக் கோவில் உள்ளே புதைத்து இருக்கலாம் என்று கருதலாம். எல்லாம் நமது கோவில்களில் அடித்த கொள்ளை காசுதான்!

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.