சோதனைச்சாவடியில் அதிர்ச்சி… எஸ்.எஸ்.ஐ.,யை சுட்டுக் கொன்று தப்பித்த மர்ம கும்பல்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
wilson ssi - 2026

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த SSI வில்சன் என்பவரை காரில் வந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் மூன்று குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்!

துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் உயிரிழந்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

கேரள தமிழக எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாவலில் இருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.. செய்யப் பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் இருந்த மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மர்ம காரையும்,மர்ம நபர்களை யும் தென்காசி மாவட்ட பகுதிகளிலும்,தமிழக கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதி களிலும் காவல்துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.