யோகி பாபு சொன்ன ரகசியம்!

சினி நியூஸ் சினிமா
yogibabu - 2026

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு அதில் நிரந்தரமாக நீடித்துக் கொண்டு இருப்பது. மிகவும் கடினம் அப்படி நீண்ட நாள் காமெடியில் கலக்கியவர்களில் ஒருவர் தான் யோகி பாபு.

தான் நடித்த முதல் திரைப்படமான யோகியில் நடித்த பிறகு அப்படத்தின் பெயரையே தன் பெயரில் இணைத்து யோகி பாபு என்று மாற்றி கொண்டார். முதலில் சின்னத்திரையில் ஒளிபரப்பான லொல்லு சபாவில் நடித்தார் யோகி பாபு.

அத்தொடரின் இயக்குநர் ராம் பாலா அவரை ஜீனியர் ஆடிஸ்டாக பின்னாளில் நடிக்க வைத்தார். யோகி படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ஓரு பிரேக் ஆக அமைந்தது பட்டத்துயானை திரைப்படம்.

மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பாபு.

yoghi babu - 2026

இவரை எல்லோருக்கும் நன்கு அறிமுக படுத்திய திரைப்படம் சிவகார்த்திகேயன் நடித்த மான் காரத்தே, இதில் வவ்வால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து காமெடியில் அனைவரையும் கவர்ந்தார்.

இதுவே இவருக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது. மணிகண்டனின் காக்க முட்டை படத்தில் இவர் பேசிய எனக்கே விபூதி அடிக்க பாத்தலே வசனம் இன்று வரை ரசிக்க வைக்கிறது.

இதன் பின் பல படங்களில் நடித்து காமெடியில் கலக்கி வந்தார் யோகி பாபு. தன்னால் காமெடி மட்டுமல்லாமல் யதார்த்தமான கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று இவரை ரசிகர்களுக்கு காட்டிய திரைப்படம் பரியெறும் பெருமாள். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் யோகி பாபு.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இவரிடம் உங்கள் தலையில் இவ்வளவு முடி வளர்கிறதே அதற்கு என்ன காரணம் என்று காமெடியாக கேட்ட போது அவர் அதற்கு ஒரு ரூபாய் சீயக்காய் தான் இவ்வளவு வளர காரணம் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். மனதில் பட்டத்தை தைரியமாகவும் , காமெடியாகவும் சொல்ல கூடிய திறமைசாலி தான் யோகி பாபு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.