வளர்ப்பு தந்தை செய்த செயல்! நடிகை போலீஸில் புகார்!

சினி நியூஸ் சினிமா
vijyalakshmi - 2026

வளர்ந்து வரும் இளம் கன்னட நடிகை விஜயலட்சுமி. இவர் தற்போது துங்கபத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆஞ்சநேயா என்பவர் இயக்குகிறார்.

படத்தில் நடிக்கும்போதே இயக்குனர் ஆஞ்சநேயாவும், விஜயலட்சுமியும் காதலித்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.

இவர்கள் காதலுக்கும், கல்யாணத்துக்கும் விஜயலட்சுமியின் வளர்ப்பு தாய், தந்தையர் ஒப்புதல் அளிக்கவில்லை.இதனால் அவர்களை மீறி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயலட்சுமியின் வளர்ப்பு தந்தை, விஜயலட்சுமி பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணம் வாங்கிக் கொண்டு நடிக்க மறுப்பதாக காவல்துறையினர் புகார் கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு காவல்துறையின்ர் விஜயலட்சுமிக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

vijaya lakshmi - 2026

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான விஜயலட்சுமி, அங்கு கூறியதாவது: எனது வளர்ப்பு தந்தை என்னை வைத்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார். அவர் என்னை மகள்போல பார்க்கவில்லை.

அவரின் தொல்லைகளில் இருந்து தப்பிக்கவே நான் ஆஞ்சநேயாவை விரும்பி திருமணம் செய்து கொண்டேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார்.என் கணவரை கொலை செய்ய முயற்சித்தார்.

அதலிருந்து அவர் தப்பினார். எனது வளர்ப்பு தந்தையால் எனது உயிருக்கும், என் கணவர் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். இவ்வாறு விஜயலட்சுமி கூறியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.