
பத்மாவத் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட்நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘தாதா சாகிப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பத்மாவத் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசு கவுரவம் தரும் வகையில் இந்த விருதை வழங்குகிறது.
ரன்வீர் சிங்குக்கு விருதை கடிதம் மூலம் தேர்வுக்குழு அறிவித்துள்ளதாகவும், இந்த விருது குறித்த தகவல் தெரிந்ததும் நடிகர் ரன்வீர்சிங் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தாதா சாகிப் பால்கே விருது பெற்ற ரன்வீர்சிங் அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் இருந்து சக நடிகர், நடிகைகளிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



