சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகரும், ரஜினியின் ‘2.0’ படத்தின் வில்லனாக அக்சயகுமார் என்ற பாலிவுட் நடிகரும் நடித்திருக்கும் நிலையில் ரஜினியின் அடுத்த படத்திலும் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரே வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் பல வெற்றி படங்களில் நடித்த நவாசுதின் சித்திக் என்பவர்தான் ரஜினியின் அடுத்த படத்தின் வில்லன். இவரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்துவிட்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், கோலிவுட் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



