வைபவ் புதிய முயற்சி!

சினி நியூஸ் சினிமா
vaibhav - 2026

வைபவ் மற்றும் நந்திதா நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் டாணா. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் படக்குழுவினர் மற்றும் திறை உலகினர் பலர் கலந்து கொண்டனர்.

வைபவ் தமிழில் வளர்ந்து வரும் ஒரு நடிகர்.தெலுங்கு சினிமாவில் அறிமுகமானலும் தமிழ் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

இயக்குனர் வெங்கட் பிரபு இவரை தமிழில் அறிமுகம் செய்து வைத்தார். வெங்கட் பிரபுவின் நண்பர்களில் இவரும் ஒருவர்.

taanaa - 2026

இவர் அஜித் உடன் நடித்த மங்காத்தா படம் மூலமாக மிகவும் பிரபலமானார். இப்படத்திற்கு முன்பாக கடந்த வருடம் இவர் நடித்த சிக்சர் படம் வெளியானது.

தற்போது இவர் நடித்து இருக்கும் படம் டாணா இதற்கு அர்த்தம் போலீஸ் காரன் என்பதாகும்.

ஹீரோவின் குரல் பெண் குரலாக இருக்கும் பல சீன்களில் இது படத்தின் ஸ்கிரிப்ட் படி அமைந்தது. நாங்கள் எதுவும் செய்யவில்லை.

 இதில் கோபப்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ குரல் மட்டும் பெண் குரலாகும் மாறும் வியாதி நம்ம ஹீரோவிற்கு இருக்கிறது. அதனால், ஏற்படும் விளைவுகள் தான் படம் என்று கூறப்படுகிறது.

Taana1 - 2026

படத்தை பற்றி தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் பேசுவதை வைத்து பார்க்கும்போது படத்தில் எதோ ஒரு சர்ப்ரைஸ் ஒளிந்துள்ளது. படத்தில் காமெடிக்கு யோகி பாபு உள்ளார் அதனால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.

படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.