தெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
telangana kcr jagan - 2026
  • கேசிஆர் மீது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் எரிச்சல்.
  • ஆந்திரப் பிரதேசை அழிப்பதற்கு திட்டம் தீட்டி உள்ளீர்களா?
  • ஜெகன்மோகன் ரெட்டியும் விஜயசாயிரெட்டியும் எந்த தூரம் வேண்டுமானாலும் கீழிறங்க தயங்கமாட்டார்கள்.
  • ஒய்சிபியின் நடைமுறை மீது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் ஆத்திரம்.

ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று தலைநகர்கள் இருப்பது நல்லதே என்று ஜெகனுக்கு கேசிஆர் பாராட்டு தெரிவித்தது குறித்து குண்டூர் மாவட்ட தெலுகு தேசம் கட்சி தலைவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

telangana kcr - 2026

அது அத்தகைய சிறப்பான முடிவு என்றால் தெலங்காணாவிலும் கூட மூன்று தலைநகர்கள் ஏன் வைக்கவில்லை என்று வினா எழுப்பினார்.

முதல்வர் ஜெகன் தனியாகக் கேசிஆரோடு ஆறு மணிநேரம் பேச்சு நடத்தினார். அந்த உரையாடலால் ஆந்திராவுக்கு கிடைத்த பலன்கள் என்னவோ வெளியே தெரிவிக்க வேண்டும் என்று டிடிபி பொலிட்பீரோ மெம்பர் ‘வர்ல’ ராமய்யா டிமாண்ட் செய்தார். அமராவதி வளர்ச்சி அடைந்தால் அருகிலேயே உள்ள ஹைதராபாத்துக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்ற தீய எண்ணம் கேசிஆர் பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது என்று எம்பி ‘கல்லா’ ஜயதேவ் குற்றம்சாட்டினார்.

ஜகன் முதல்வர் ஆன நாள் முதல் ஆந்திர பிரதேசுக்கு ஷேடோ பாஸாக கேசிஆர் நடந்து கொள்கிறார் என்று விமர்சித்தார்.

அடக்கி ஆள்வதற்கு இது ஒன்றும் ஆர்டிசி போராட்டம் அல்ல என்றும் தெலுங்கு மக்களின் தன்மானப் பிரச்சினை என்றும் முன்னாள் அமைச்சர் ‘நக்கா’ ஆனந்தபாபு கூறினார்.

telangana kcr2 - 2026

2019 தேர்தலில் ஒய்சிபிக்கு பண உதவி செய்ததற்கு நன்றியாக விஜயசாயிரெட்டி கேசிஆருக்கு பாத நமஸ்காரம் செய்தார் என்றார்.

கேசிஆரின் காலில் விழுவதும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதும் அங்கப்பிரதட்சணம் செய்வதும் ஏ ஒன், ஏ டூக்களுக்கு புதியது ஒன்றுமில்லை என்று டிடிபி மாநிலத் தலைவர் ‘கிமிடி களா’ வெங்கட்ராவு ஏளனம் செய்தார்.

வழக்குகளிலிருந்து வெளி வருவதற்காக விஜயசாயிரெட்டி, நில ஆக்கிரமிப்பு செட்டில்மெண்ட் வசூல் போன்றவற்றுக்காக அமைச்சர் அவந்தி ஸ்ரீனிவாஸ் போன்றோர் கேசிஆரின் காலில் விழும் பேரம் பேசுவதற்கு போட்டியில் உள்ளார்கள் என்று டிடிபி எம்எல்ஏ மந்தென சத்யநாராயண ராஜூ விமர்சனம் செய்தார்.

ஒலிம்பிக்கில் பாதபூஜை போட்டி நடத்தினால் இவர்கள் இருவருக்கும் முதல் பரிசு கிடைக்கும் என்று ஏளனம் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.