சோசியல் மீடியாவுல ‘ச்சீச்சீ’, ‘உவ்வே’ ரக கமெண்டு போடுறீங்களா..?! எச்சரிக்கையா இருங்க!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
01 July25 Social media - 2026

சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துகளை பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து ஆபாசமான கருத்துகளை பதிவு செய்ததாக மருதாசலம் என்பவர் கைதானார். இவர் ஜாமீன் கோரிய வழக்கில், சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

social media 1 - 2026

மேலும், சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள் பதிவிடுபவர்கள் குறைந்தபட்சம் 10 பேரின் விவரங்களை இன்று மதியத்திற்குள் தாக்கல் செய்யவும் நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார்.

இதுவரையிலும், சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், கருத்து தெரிவிக்கலாம் என்று ஆபாசங்களின் உச்சமாக சண்டையிட்டு இயங்கியவர்கள், தற்போது இந்த உத்தரவால் தேடுதல் இலக்காகியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.