மோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா?!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
modi rajinikanth2 - 2026

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்வில் இடம்பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அது, பேர் கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி குறித்தானது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும் கலந்து கொள்கிறாராம்.

சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி பேர்கிரில்ஸின் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி, டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்ற சாதனையைப் படைத்தது இந்த நிகழ்ச்சி.

இந்நிலையில், நடிகர் ரஜினி காந்த், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பேர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.