மகாத்மா காந்திஜி நினைவு தினம்… திருச்சியில் அஸ்தி மண்டபத்தில் அஞ்சலி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
gandhiji day - 2026

மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தேசத்தந்தை மகாத்மா காந்திஜி சத்தியாக்கிரக அறவழிப் போராட்டம் மூலம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன், பல நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தார்

அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 தேதி டில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

காந்திஜியின் பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்றும், நினைவு நாளை தியாகிகள் தினமாக போற்று கின்றனர். இவரது தியாகத்தை போற்றி சிறப்பிக்கும் வகையில் திருச்சி புத்தூர் பகுதியில் மகாத்மா காந்திஜி அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி சேவா சங்க செயலாளர் சரஸ்வதி அமிர்தா யோக மந்திரம் யோகக்கலை பயிற்றுனர் விஜயகுமார், ஒயிட் ரோஸ் தொண்டு நிறுவன சங்கர் ,பள்ளி மாணவ-மாணவியர் உட்பட பலர் மலர்தூவி மரியாதை செய்தார்கள்.

gandhiji day1 - 2026

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் மகாத்மா காந்தி புகைப்பட அஞ்சல் அட்டை கண்காட்சி கிளை நூலக வளாகத்தில் நடைபெற்றது.

புத்தூர் கிளை நூலக நூலகர் தலைமை வகித்தார். மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எடுத்துக் கூறும் வகையில் மகாதமா காந்தி அஞ்சல் அட்டை புகைப்படங்களை காட்சிப்படுத்தினார்.

கண்காட்சியில் கரம்சந்த் காந்தி புத்திலி பாய் அம்மையாருக்கும் மகாத்மா காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் போர்பந்தரில் பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை போர்பந்தரில் பயின்று ராஜ்காட் கத்தியவார் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் ஆல்பர்ட் உயர்நிலைப் பள்ளி என பெயர் மாற்றம் பெற்றது. பதிமூன்றாம் வயதில் கஸ்தூரிபாயைத் திருமணம் செய்தார்.

1889 முதல் 1893 காலங்களில் லண்டனில் சட்டம் பயின்றார். 1893 – 1904 காலங்களில் தென் ஆப்ரிக்கா செல்லும் போது அங்கு இருந்த நிறவெறி அதிர்ச்சியை தந்தது. பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறவேற்றுமையால் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது.

அகிம்சை வழியில் சத்தியாகிரகப் போராட்டம் தென்னாப்பிரிக்காவில் 1904-1914 காலங்களில் நடைபெற்றது. 1915 காந்தி இந்தியா வந்தடைந்தார். இரவீந்திர நாத் தாகூர் அவரை மகாத்மா என்று அழைத்தார். 1922ல் காந்திக்கு ஆறாண்டு சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டு 1924 ஆண்டு விடுதலை பெற்றார்.

டிசம்பரில் பெல்காமில் தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1930 – 1942 காலங்களில் உப்பு வரிக்கு எதிராக சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.

1930 மார்ச் மாதம் காந்தி 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து அரபிக் கடலின் கரையோரத்தில் இருந்த தண்டிக்கு 241 மைல் தூர பாதயாத்திரையை மேற்கொண்டார்.

25 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5ஆம் நாள் தண்டியை அடைந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஒரு கையளவு உப்பை உலர்ந்த உப்பங்கழியிலிருந்து எடுத்து உப்புச் சட்டத்தை மீறினார். 1939ல் இரண்டாவது உலக யுத்தம் மூண்டது. 1947 மார்ச் பிரிட்டிஷ் அரசு பிரபு மவுண்ட்பேட்டனை வைஸ்ராயராக இந்தியாவிற்கு அனுப்பி ஆகஸ்ட் 15 விடுதலை அளிப்பதாக முடிவெடுத்தது.

1948 ஜனவரி 30 தேதி அன்று பிர்லா மாளிகைக்கு மனு, அபா இரண்டு பேத்திகளின் தோள்கள் மீது கரங்களை வைத்து மாலை 5.13 மணிக்கு பிரார்த்தனை இடத்திற்கு வந்தார்.

கூட்டத்தில் நாது ராம் விநாயக கோட்சே காந்தி மார்பில் மூன்று முறை சுட்ட போது ஹேராம் எனக் கூறி கீழே விழுந்தார்.

உடல் தகனம் செய்யப்பட்ட ராஜ்காட்டில் காந்தியின் சமாதியில் கடைசி வார்த்தையான ஹேராம் வார்த்தை பொறிக்கப் பட்டுள்ளது.

1869 – 1948 மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் அரிதான அஞ்சல் அட்டை புகைப்படங்களை நூலக வாசகர்கள் கண்காட்சியில் கண்டு களித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.