எங்களை குட்ட நினைக்க கூடாது… தேமுதிகவின் இளைஞர்கள் படை வலிமை வாய்ந்தது: பிரேமலதா!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்
preamaladha vijayakanth - 2026

தேமுதிக கூட்டணி தர்மத்தை மதிக்கிறது; ஆனால் தொடர்ந்து எங்களை குட்ட நினைக்கக் கூடாது என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிகவினருக்கு பாராட்டு விழா வெள்ளியன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

நமது கேப்டன் விஜயகாந்த் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கிறார் என்று தொண்டர்கள் இன்றும் பேசுகின்றனர். விரைவில் உடல்நலம் பெற்று விஜயகாந்த் தேர்தலில் பரப்புரை செய்வார்.

கூட்டணி தர்மத்தை எப்போதும் தேமுதிக மதிக்கிறது. அதில் இருந்து விஜயகாந்த் மாறமாட்டார். கொடுக்கும் வார்த்தை எப்போதும் மாறாது. ஆனால் எங்களை குட்ட நினைக்க கூடாது. அதற்கு குனிய மாட்டோம். தேமுதிகவின் இளைஞர்கள் படை வலிமை வாய்ந்தது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.