திருக்குறள் வழியில் நடக்கிறது மோடி அரசு! குறள் விளக்கம் சொல்லி நிர்மலா சீதாராமன் பேச்சு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
nirmalaseetharaman1 - 2026

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து” – எனும் திருக்குறளை சுட்டிக்காட்டி திருமதி.நிர்மலா சீதாராமன் உரை ஆற்றினார்.

மத்திய பட்ஜெட் 2020-21ஐ தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது, குறள் 738 ஐ சுட்டிக் காட்டி நிர்மலா சீதாராமன் பேசியவை…

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். பிணியின்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக, நோயற்ற வாழ்வினை மக்களுக்கு வழங்க ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது… என்று கூறி, விவசாயிகளுக்கான விளைபொருள்கள் இரட்டிப்பாக்கும் திட்டம், மக்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான திட்டம், தேசிய பாதுகாப்பில் அரசு அக்கறையுடன் எடுத்துவரும் திட்டங்களை எடுத்துக் கூறி, பிரதமர் மோடியின் அரசு, திருக்குறள் வழியில் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.