wilson - 2026

ராமநாதபுரத்தில் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்டதிலிருந்து, தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கூறிவந்தது உண்மையாகும் வகையில் உள்ளிட்டவர்கள் கூறிவருகின்றனர். அதற்கு ஏற்றார்போல பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் மீனவர்கள் மத்தியில் பயங்கரவாதி ஒருவன் பதுங்கியிருக்கிறான் என்று காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் காவல்துறை தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையிலிருந்த தாவூத் என்பவரை காவல்துறை கைது செய்தனர்.

விசாரணையின்போது அவர் ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்றும், எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக் குற்றவாளிகளுக்கு பண உதவி செய்ததும் தெரியவந்தது. காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending