மிக நீண்ட பட்ஜெட் உரை… 2.42 நிமி., உரையாற்றி தன் சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
nirmalaseetharaman2 - 2026

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்ற சாதனையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார். ஏற்கெனவே தாம் நிகழ்த்திய இந்த சாதனையை இந்த வருடம் தாமே முறியடித்துள்ளார்.

2020-21 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2 மணி 42 நிமிடங்கள் நேரம் இவர் பட்ஜெட் உரை நிகழ்த்தினார். இதற்கு முன் 2019 ம் ஆண்டு இவர் தாக்கல் செய்த உரை தான் மிக நீண்ட பட்ஜெட் உரையாக சாதனை படைத்திருந்தது. கடந்த ஆண்டு இவர், இரண்டு மணி நேரம் 17 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். தற்போது இந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

காலை 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை துவக்கிய நிர்மலா, பகல் 1.40 மணி வரை தொடர்ந்தார்.

பட்ஜெட் உரையைப் பொறுத்தவரை… முன்னாள் மத்திய அமைச்சர் ஜஷ்வந்த் சிங் நீண்ட உரை ஆற்றி இருந்தார். இவரை விட 2 நிமிடங்கள் கூடுதலாக பட்ஜெட் உரை நிகழ்த்தி, அவரின் சாதனையை நிர்மலா கடந்த ஆண்டு முறியடித்தார்.

2018ல் அருண் ஜெட்லி 1 மணி 49 நிமிடங்களும், 2019ல் 1 மணி 50 நிமிடங்களும் உரையாற்றினார். 2015 ல் இவரின் பட்ஜெட் உரை 2 மணி நேரத்திற்கும் அதிகமாக இருந்தது.

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட உரை ஆற்றியவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து நிர்மலா 2வது இடத்தில் உள்ளார்.

நீண்ட நேரம் பட்ஜெட் வாசிப்பதில் முதலிடம் பிடித்த நிர்மலா சீதாராமன்

2:42 மணி நேரம் – நிர்மலா சீதாராமன் ( 2020 )
2:15 மணி நேரம் – நிர்மலா சீதாராமன் ( 2019 )
2:13 மணி நேரம் – ஜஸ்வந்த் சிங் ( 2003 )
2:10 மணி நேரம் – அருண் ஜேட்லி ( 2014 )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.