அரியானாவில் பயிர்கடனுக்கான வட்டி ரத்து! முதல் மந்திரி!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்
kattar - 2026

அரியானா மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை ரூ.4,750 ரத்து கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் அறிவித்தார்

அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மனோகர் லால் கட்டார் முதல்-மந்திரியாக உள்ளார். விரைவில் அரியானா சட்டசபை தேர்தல் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது

பிவானி மாவட்டத்தில் ஜன் ஆஷிர்வாத் யாத்திரையில் கலந்துக்கொண்ட முதல்வர் கட்டார் கூறுகையில், விவசாயிகளுக்காக மொத்தம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் சலுகைகளை அறிவித்துள்ளோம்.

vivasayi - 2026

இந்த சலுகை மூலம் விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இதனால் சுமார் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறினார். விவசாயிகளின் நலன் கருதி பயிர் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை ரூ.4,750 கோடி ரத்து செய்யப்படுகிறது.

அதாவது விவசாயிகள் இனி வட்டி மற்றும் அபராதங்களை செலுத்த வேண்டியதில்லை. விவசாயிகள் பயிர்க்கடனின் அசல் தொகையை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கிய விவசாயிகள் இப்போது 12-15 சதவீத வட்டிக்கு பதிலாக இரண்டு சதவீத வட்டியை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

இதன் மூலம் ஆரம்ப வேளாண் கூட்டுறவு சங்கங்கள் (பிஏசிஎஸ்), மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கிகள் (டிசிசிபி) மற்றும் நில அடமான வங்கி (எல்எம்பி) உள்ளிட்டவற்றில் இருந்து கடன் பெற்ற சுமார் 10 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள்” .என்று முதல்வர் கட்டர் கூறினார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.