என்ஆர்சி.,யை ஆதரிக்கிறேன்; அரசியல்வாதிகள் பீதி கிளப்புகிறார்கள்; மாணவர்களே எச்சரிக்கை: ரஜினிகாந்த்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
rajinikanth - 2026

நான் NRC யை நான் ஆதரிக்கிறேன்; மாணவர்கள் அரசியல்வாதிகளின் தூண்டுதலுக்கு இழக்காக கூடாது; இந்திய இஸ்லாமியர் களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை அப்படி இருந்தால் நானே நேரடியாக களம் இறங்குவேன் என்று நடிகர் ரஜினி காந்த் கூறினார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை” என்று அடித்துக் கூறினார்.

மேலும், இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போராடுவேன் என்றும், இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்படுகிறது என்றும் கூறினார்.

அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டிய ரஜினிகாந்த் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது நடத்தப்பட வேண்டும் என்று உறுதிபடக் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப் பட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை என்றார்.

இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக தூண்டிவிடுகின்றன. இந்த நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் நான் குரல் கொடுப்பேன் என்று உறுதிபடக் கூறினார் ரஜினிகாந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.