February 10, 2025, 1:12 PM
30.2 C
Chennai

வைக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க சிவாலயம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் ஆலயம். இங்கே கார்த்திகை அஷ்டமியை ஒட்டி வைக்கத்தஷ்டமி திருவிழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. மாசி அஷ்டமியும் சிறப்பு. இங்கே சிவ பெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அம்பிகை தனியே இல்லை என்றாலும், 12 வருடத்திற்கு ஒரு முறை 12 நாள் தொடர்ந்து தேவி வழிபாடும் செய்யப் படுகிறது.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி நாளில் காலை 4 முதல் 8 மணி வரை சிவனை வழிபடுவது சிறப்பு. இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது.

கிழக்கே பார்த்து அமைந்துள்ள லிங்கத்தின் மீது அன்றைய தினம் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை செய்கிறார்.

தலபெருமை: வைக்கத்தஷ்டமி: சூரபத்மனையும், தாரகாசூரனையும் அழித்து முருகப் பெருமான் வெற்றிபெற, வைக்கத்தஷ்டமி தினத்தன்று சிவபெருமானே நேரடியாக இங்கு அன்னதானம் செய்ததாக தல புராணம் கூறுகிறது. இத்தலத்தில் வைக்கத்தஷ்டமி தினத்தன்று அன்னதானம் செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும். இதற்கு “பிராதல்’ என்று பெயர். இந்த அன்னதானத்தில் சிவனும் பார்வதியும் கலந்து கொள்வார்கள் என்பது நம்பிக்கை!

வனதுர்க்கை சந்நிதி: கோயிலின் தெற்கு பகுதியில் வன துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இந்த சந்நிதிக்கு மேற்கூரை இல்லை. வியாக்ரபாதர் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்தபோது ஒரு அரக்கி இடையூறு செய்தாள். ஒரு கந்தர்வ கன்னி இப்படி அரக்கியாக மாறியிருப்பது தெரிய வந்தது. அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்க வியாக்ரபாதர் விநாயகரை வேண்ட, அவர் திரிசூலியை அனுப்பி அரக்கியை 3 துண்டாக்கும்படி கூறினார்.

அவ்வாறு செய்ததில், உடல்பகுதி விழுந்த இடத்தில் வனதுர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவளை வழிபட்டால் நம்மைப் பிடித்த அரக்க குணங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அரக்கியின் தலைபகுதி முத்தோடத்துகாவிலும், கால்பகுதி குடிச்சேலிலும் விழுந்துள்ளது. திரிசூலியை அனுப்பிய கணபதி, இத்தலத்தின் பலிபீடம் அருகே இருக்கிறார்.

தல வரலாறு: கரன் என்ற அசுரன் மோட்சம் அடைவதற்காக சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். தவத்திற்கு மகிழ்ந்த சிவன் அவனிடம் 3 லிங்கங்களைக் கொடுத்து அதை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய கூறினார். வலக்கையில் ஒரு லிங்கமும், இடக்கையில் ஒரு லிங்கமும், வாயில் ஒரு லிங்கமுமாக அவன் எடுத்து சென்றான். அச்சமயத்தில் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், சிவனை நோக்கி தவம் இருந்தார்.

இவரது தவத்தின் பலனாக கார்த்திகை மாதம் கிருஷ்ண அஷ்டமி தினத்தில் சிவன் காட்சிதந்து,””வேண்டும் வரம் கேள்”என்றார். அதற்கு வியாக்ரபாதர், “”இதே நாளில் தங்களை இவ்விடத்தில் வந்து தரிசிப்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என வேண்டினார். (இதுவே “வைக்கத்தஷ்டமி’ விழாவாக கொண்டாடப்படுகிறது)

இதன் பின் கரன், தனது வலக்கையில் கொண்டு வந்த லிங்கத்தை வியாக்ரபாதரிடம் கொடுக்க, அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்த இடம் தான் “வைக்கம்’ என அழைக்கப்படுகிறது.

கரன் இடக்கையில் கொண்டு வந்த லிங்கத்தை ஏற்றமானூரில் மேற்கு நோக்கியும், வாயில் கடித்து கொண்டு வந்த மூன்றாவது லிங்கத்தை கடித்துருத்தியில் கிழக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்தான் கரன்.

சந்நிதி திறந்திருக்கும் நேரம்:  காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

தகவலுக்கு: ஸ்ரீமகாதேவர் திருக்கோயில், வைக்கம்- 686 141, கோட்டயம் மாவட்டம். கேரளா மாநிலம் போன்: +91- 4829-225 812.

அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் கோயில் நிர்வாகத்திடம் பணம் கட்டி முன்பதிவு செய்ய வேண்டும். மூலஸ்தானத்தில் 2 அடி உயர பீடத்தில் 4 அடி உயர லிங்கம் அமைந்துள்ளது. அம்மனுக்கு சந்நிதி கிடையாது. கோயில் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், பார்வதியையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Topics

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories