தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம்… தேசிய அளவில் ‘டாப்-10’ பட்டியலில்!

Published:

theni-police-station
theni-police-station

இந்திய அளவில் சிறந்த 10 காவல் நிலைய பட்டியலில் தேனி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் தேர்வு

மதுரை: மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு சிறந்த காவல் நிலையம் பட்டியலில் தேனி மாவட்டம்¸ அனைத்து மகளிர் காவல் நிலையம் 4ம் இடத்தை பிடித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்ட பாராட்டு சான்றிழழை , தென்மண்டல காவல்துறை த் தலைவர்
முருகன்.¸ அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
மங்கையர்கரசியிடம் வழங்கினார்.

உடன் ,திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர்
முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சாய்சரண் தேஜஸ்வி இருந்தனர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Related articles

Recent articles

spot_img