சமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்! வருந்திய ஹீரோ!

சினி நியூஸ் சினிமா
marjuvana - 2026

எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் அட்டு ஹீரோ ரிஷி ரித்விக், ஆஷா பர்த்தாலோம் நடித்துள்ள படம், மரிஜுவானா. இசை, கார்த்திக் குரு.

போதை பழக்கத்திற்கு அடிமையான ஒருவனின் சைக்கோ கொலைகளை மையப்படுத்தி தயாராகி உள்ளது படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூ சான்றிதழ கேட்டனர்

marijuvana - 2026

ஆனால் 52 சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை வெட்டி நீக்கினால் யூஏ சான்றிதழ் தருவதாகவும் தெரிவித்தனர் படகுழுவினர் அதற்கு உடன்படவில்லை இதையடுத்து படத்துக்கு குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது

நாளை ரிலீசாகும் படம் குறித்து ரிஷி ரித்விக் கூறியதாவது:

கஞ்சா என்பதன் அறிவியல் பெயர், மரிஜுவானா. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதால் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர் என்பது கதை.

rithvi - 2026

சில முன்னணி ஹீரோக்கள் கதையை கேட்டுவிட்டு, ஏதேதோ காரணம் சொல்லி மறுத்துவிட்டனர். நான் மட்டும் துணிச்சலுடன் நடித்தேன். காரணம், சமுதாயத்துக்கு அவசியமான கருத்து சொல்லும் படம் என்பதுதான்.

எனக்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதிக போதை ஒரு மனிதன் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்று சொல்லும் விழிப்புணர்வு கருத்து கொண்ட இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இது அதிர்ச்சி தந்தது.
!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.