பாவம்… அடிமை வாழ்க்கை… சாப்பாடு இல்ல… டிரைவர் வேலை! நடிகர் நகுல் இப்படி ஆய்ட்டாரே!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
actor nagul - 2026

பாவம் நடிகர் நகுல் இப்போ டிரைவர் வேலை பாக்குறாராம். சாப்பாடு இல்லே… சம்பளம் இல்லே… என்னா அடிமைத்தனம்!? ரொம்பவே பாவம் தான்!

நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தை பதிவிட்டு, தாம் டிரைவர் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் படத்துக்குப் பின்னர் இவர் நடித்த காதலில் விழுந்தேன், மாசிலாமணி என சில படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெயரைப் பெற்றுக் கொடுத்தன.

பின்னாளில் இவர் நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. நடிப்பதுடன் நின்றுவிடாமல், தனியார் டிவி.,க்களின் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பங்கேற்று, நகுல் தன்னை வெளியுலகுக்குக் காட்டி வருகிறார்.

தற்போது நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். கார் ட்ரைவர் கெட்டப்பில் இருக்கும் அவர், மனைவிக்காக ட்ரைவர் மோட். இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை, சம்பளம் இல்லை, நல்ல உடை இல்லை. ரொம்ப மோசமான பாஸ், நம்புங்க’ என தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு பதிலளித்துள்ள அவரது மனைவி, ‘உங்களை விட நான் நன்றாக கார் ஓட்டுவேன் என்று உங்கள் அம்மாவே சொல்லியிருக்கிறார். நான் ஏன் உங்களை டிரைவராக வைக்கப் போகிறேன். இதெல்லாம் சரியான நாடகத்தனம்’ என்று கிண்டலடித்துள்ளார்.

என்னவோ போங்க.. கல்யாணம் ஆச்சுன்னாலே அடிமைத்தன வாழ்க்கைதான்! அதை நகுல் இவ்ளோ நக்கலா சொல்லியிருக்க வேண்டாம்தான்! பாவம் அப்பால அடி வாங்குறது அவருதானே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.