முகத்தை மூடிக் கொண்டு தங்கள் அடையாளங்களை மறைத்து கொள்வதற்கு, கேரளத்தில் ஒரு கல்வி அறக்கட்டளையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இலங்கையில் ஈஸ்டர் நாளில் கிறிஸ்துவர்களைக் குறி வைத்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்கொலைப் படை பயங்கரவாதிகளில் பெண்களும் இருந்த நிலையில், இலங்கை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அதன்படி, எவராயிருந்தாலும், முகத்தை மூடி தங்கள் அடையாளத்தை மறைப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
அதேபோல், கேரளாவில் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளில் மாணவிகள் முகத்தை மூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனது அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு கேரள இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
குண்டுவெடிப்புக்கு பின் இலங்கை மட்டுமின்றி இந்தியாவிலும் அவ்வாறு பெண்கள் முகத்தை மூட தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவில், குறிப்பாக கேரளத்தில் இஸ்லாமிய அறக்கட்டளை ஒன்று இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.





Mr.H.Raja insisted this in TN. Dravidian parties favour hiding faces. Now TN has become home for terrorists