சிபிஎஸ்இ., 12 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி, ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது.
சிபிஎஸ்இ., 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவு பெற்ற இந்தத் தேர்வுகளை 4,974 தேர்வு மையங்களில் 12,87,359 மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ., தேர்வுமுடிவுகள் வெளியிடப் பட்டன. அதன்படி 83.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா இரு மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர்களுக்கு உபி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Congratulations to CBSE 12th toppers from U.P. Hansika Shukla & Karishma Arora. Best wishes to all who cleared the exams.
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 2, 2019
Congratulations parents, students and teachers. Congrats Delhi. Its a matter of pride for Delhi. https://t.co/5tdXuhDunp
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 2, 2019
சிபிஎஸ்இ தேர்வுகளில், திருவனந்தபுரம் மண்டலத்தில் 98.2% மாணவர்களும், சென்னை மண்டலத்தில் 92.93 % மாணவர்களும், தில்லி மண்டலத்தில் 91.87 % மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகளை, www.cbse.nic.in மற்றும் www.cbseresults.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.




