இன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இந்தத் தேர்வில், 91 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதல் சிறந்த நான்கு இடங்களில் தனது மகன் வந்ததற்காக பெருமிதப் பட்டு டிவிட்டர் பதிவில் வாழ்த்து மழை பொழிந்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகன் ஸோஹ்ர் இரானி பொருளாதாரப் பாடத்தில்94 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். மொத்தமாக 91 சதம் எடுத்துள்ளார். இதற்காக, ஸ்மிருதி இரானி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், நல்லது, இதனை நான் சத்தமாகவே கூறுகிறேன். என் மகன் ஸோஹ்ர் மீது பெருமிதமாக உள்ளது. உலக கெம்போ சாம்பியன்ஷிப்பில் வெங்கலப் பதக்கம் வென்றான் என்பதுடன், சிபிஎஸ்இ தேர்வில் சிறந்த 4 இடங்களில் வந்துள்ளான். 91% பெற்றுள்ளான். குறிப்பாக பொருளாதாரத்தில் 94% பெற்றுள்ளான் ! இன்று நான் ஒரு மகிழ்ச்சிப் பெருக்குள்ள அம்மா. என்னை மன்னித்து விடுங்கள்.. ! என்று கூறியுள்ளார்.
Ok saying it out loud— proud of my son Zohr..not only did he come back with a bronze medal from the World Kempo Championship also scored well in 12 th boards. Best of 4– 91% .. special yahoo for 94% in economics.. Maaf karna ,today I’m just a gloating Mom????
— Chowkidar Smriti Z Irani (@smritiirani) May 2, 2019




