![நோ மோடி நோ டிவிட்டர் ; ட்ரெண்ட் ஆன டாபிக்! 1 pmmodi](https://dhinasari.com/wp-content/uploads/2020/02/pmmodi.jpg)
நேற்று இரவு மோடி பதிவிட்ட ஒரு டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப் பட்டது.
பிரதமர் மோடி, தாம் ஞாயிறு அன்று, சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிவிடலாம் என்று எண்ணியதாகக் குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து அவர் அனைத்து சோஷியல் மீடியாக்களில் இருந்தும் விலகிவிடுவதாகக் கூறினார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பலர் ‘NoSir’ என பதிவிட்டனர். இதை அடுத்து நேற்று இரவு ‘#NoSir’ என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.
டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களில் மோடி மிகவும் பிரபலமாக இருந்தாலும், டிவிட்டரில் தான் அவருக்கு ஃபாலோயர்கள் அதிகம். இதனால் மோடி டிவிட்டரில் இல்லாவிட்டால், டிவிட்டரே கிடையாது என்ற கருத்தை பலர் பதிவிட்டனர். இதை அடுத்து #NoModiNoTwitter என்ற ஹேஷ்டேக் இன்று டிரெண்ட் ஆகி வருகிறது.