
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா 2020- இன்று 4ம்நாள் 31.01.2020- காலை சுவாமி சொக்கநாதப்பெருமான், அன்னை மீனாட்சி தங்க சப்பரம்
ஆலவாயில் அமர்ந்தருளும்
அமலன் அருளை அன்றி நெஞ்சே
சாலவாயின் வேறு துணை
சாற்றற்கு உண்டோ அவன் பெயரைக்
கோலவாயி னுரைத்துரைத்துக்
குறித்தே யவன்றாண் மலரிருப்பின்
சீலவாயின் அருள்புரிவன்
தீர்ப்பன் துயரம் யாவையுமே -சுந்தரேசுவரர் துதி







