spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்துவ பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு: இந்து முன்னணி போராட்டத்திற்கு வெற்றி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்துவ பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு: இந்து முன்னணி போராட்டத்திற்கு வெற்றி!

- Advertisement -

ஸ்ரீவில்லிப்புத்தூர் : குடியுரிமை எதிர்ப்பு மனிதசங்கிலி பேரணிக்கு பள்ளி மாணவிகளை அனுமதியின்றி அழைத்து வந்ததற்காக, ஆசிரியர்கள் வசந்தி, முத்துச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இவர்கள் இருவரையும் பணி இடைநீக்கம் செய்து 3 மாதங்கள் அலைக்கழித்து பின்னர் சொந்த ஊரிலிருந்து 120 கிலோமீட்டர் தள்ளி பணி மாற்றம் செய்தால் வழிக்கு வருவார்கள். எதையும் புரிந்து படித்து தெரிந்து கொள்ளாமல் திராவிட கும்பல்களின் ஊடகங்களை மட்டுமே பார்க்கும் முட்டாள்தனமான கூட்டத்தை விட்டு வைப்பது தவறு.. பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதிக்கிறார்கள்… என்று பலரும் தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் அரசியல் கட்சியினர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவிகளை பங்கேற்க செய்ததை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து சின்னகடை பஜார் வரை மனிதசங்கிலி நடந்தது திமுக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் முஸ்லீம் அமைப்பினர் இதில் பங்கேற்றனர் இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருதய மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆசிரியைகள் சிலரும் பங்கேற்றனர் இதை கண்டித்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட இந்து முன்னணி தலைவர் யுவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது

அவர்களை சமாதானப்படுத்தி இன்ஸ்பெக்டர் யேசுதாஸ் ஜீப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி மற்றும் வருவாய்த் துறையின் விசாரணை நடத்தி மனித சங்கிலியில் பங்கேற்ற மாணவிகள் ஆசிரியைகள் அழைத்து சென்றார்

அப்போது கட்சி நிர்வாகிகள் சிலர் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி இதுகுறித்து கூறுகையில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றது தவறு பள்ளி நிர்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் குடியுரிமை எதிர்ப்பு மனிதசங்கிலி பேரணிக்கு நேற்று பள்ளி மாணவிகளை அனுமதியின்றி அழைத்து வந்ததற்காக, ஆசிரியர்கள் வசந்தி, முத்துச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது இந்துமுன்னணி போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கூறுகின்றனர்.

இந்துமுன்னணி நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கி மாணவிகளை அழைத்து வந்தது தொடர்பாக வாக்குவாதம் செய்து போராடியது மட்டுமல்ல புகாரும் அளித்துள்ளனர்.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய மேல் நிலை பள்ளி மாணவ, மாணவிகளை நேற்று தி மு க கூட்டணி கட்சியினர் நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் போராட்டங்களில் குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக குழந்தைகளை மூளை சலவை செய்ய முயற்சித்தது, ஆகிய குற்றங்களுக்காக அந்த பள்ளியின் நிர்வாகிகளை கைது செய்வதோடு, மாநில அரசு அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். குழந்தைகளின் மனதில் நஞ்சையூட்டும் இந்த முயற்சியை செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று தர ஆவன செய்ய வேண்டும். இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் பேசினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். – என்று பாஜக., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டிருந்தார்..

ஸ்ரீவில்லிபுத்தூர் கிறிஸ்தவப் பள்ளிமாணவியரை குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஊர்வலத்துக்கு பயன்படுத்தியதை கண்டித்து இடத்துக்கே சென்று கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நமது பொறுப்பாளர்களை மனதார பாராட்டுவோம்
பாரத்மாதா கி ஜெய் என்ற சொல் போதும் தேசத்துரோகிகள் ஓடுவார்கள்.

https://twitter.com/vanamadevi/status/1223277210590568448

இதையே ஒரு ஹிந்து பள்ளி CAA..ஆதரவு போராட்டம் என்று பள்ளி குழந்தைகளை வீதியில் இறக்கி இருந்தால் இந்த திருட்டு திராவிடமும்..ஊடகமும் சும்மா இருந்திருக்குமா..? கிறிஸ்தவ பள்ளிகளில் தேசவிரோத கொள்கைதான் போதிக்கபடுகிறது.கல்வி அதிகாரிகள் எனக்கு தெரியாதுனு எப்படி சொல்ல முடியும்..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe