ஆரோக்கிய சமையல்: ஸ்டஃப்டு இட்லி!

சமையல் புதிது நலவாழ்வு பொது தகவல்கள்
masal idly - 2026

ஸ்டஃப்டு இட்லி

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 3 கப்
உருளைக்கிழங்கு – 100 கிராம்
பச்சைப்பட்டாணி – 100 கிராம்
காரட் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
குடைமிளகாய் – 2
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சைமிளகாய் – 2

செய்முறை

  1. அனைத்து காய்கறிகளையும் சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்கறி, உப்பு, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும்.
  3. எண்ணெய் தடவிய இட்லி தட்டில் கால் கரண்டி மாவை விட்டு ஒரு தேக்கரண்டி காய்கறி மசாலா பரப்பி அதன்மேல் மேலும் சிறிது மாவு ஊற்றவும்.
  4. இப்போது இட்லியை நன்றாக வேகவிட்டு இறக்கி, சூடாக எடுத்துப் பரிமாறவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.