ஸ்டஃப்டு இட்லி
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 3 கப்
உருளைக்கிழங்கு – 100 கிராம்
பச்சைப்பட்டாணி – 100 கிராம்
காரட் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
குடைமிளகாய் – 2
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சைமிளகாய் – 2
செய்முறை
- அனைத்து காய்கறிகளையும் சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்கறி, உப்பு, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும்.
- எண்ணெய் தடவிய இட்லி தட்டில் கால் கரண்டி மாவை விட்டு ஒரு தேக்கரண்டி காய்கறி மசாலா பரப்பி அதன்மேல் மேலும் சிறிது மாவு ஊற்றவும்.
- இப்போது இட்லியை நன்றாக வேகவிட்டு இறக்கி, சூடாக எடுத்துப் பரிமாறவும்