சேமியா மஞ்சூரியன்!

சமையல் புதிது நலவாழ்வு பொது தகவல்கள்
semiya 1 - 2026

சேமியா மஞ்சூரியன்

தேவையானவை:

வேக வைத்த சேமியா – ஒரு கப்,
வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு – ஒன்று,
மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு – தலா 4 டேஸ், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேஸ்பூன்,
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 2,
இஞ்சி (நறுக்கியது), – சிறிய துண்டு
குட மிளகாய் – ஒன்று,
நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தே அளவு.

semiyaa manchuriyan - 2026

செய்முறை:
வேக வைத்த சேமியாவுடன் உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் இஞ்சி-பூண்டு விழுது, பாதியளவு சோள மாவு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவு, அரிசி மாவு, மீதமுள்ள சோள மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு… பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, சோயா சாஸ், நறுக்கிய குட மிளகாய் சேர்த்துக் கலந்து, பொரித்த உருண்டைகளைப் போட்டு நன்கு கலக்கவும். வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.