கொர்…ஓணா லெட்டரு…

ஃபோட்டூன் நகைச்சுவை
vadivelu letter - 2026

டேய்… இங்க வாடா.. வா.. ஒரு லீவு லெட்டரு எழுதுடா…

சொல்லுங்கண்ணே…

அன்புள்ள ஹெச்.ஆர். அவர்களுக்கு… நான் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டிருக்கிறேன் … எனவே என்னால் ஆபீஸுக்கு வரமுடியாது. எனக்கு சம்பளத்துடன் 20 நாள் லீவு கொடுக்கவும். இல்லாவிட்டால், நான் ஆபீஸுக்கு அப்படியே வந்துடுவேன்… எப்படி வசதி?!

அண்ணே இப்படியே எழுதிக்கட்டுமாண்ணே…!

ஆமாம்டா என் வென்று…

இல்லண்ணே… ஆபீஸ்லேர்ந்து உங்களுக்கு இலவசமா வூகான் நகருக்கோ இத்தாலிக்கோ சுற்றுலா போட்டு டிக்கெட் எடுத்துக் கொடுத்துட்டாய்ங்கண்ணா… என்னண்ணே செய்வீங்க..?!

அடேய்… நீ ஒருத்தன் போதும்டா… கக்கத்துக்குள்ளேயே வெடிகுண்ட கட்டிட்டு திரியறேன்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.