கொரோனா முன்னெச்சரிக்கை: பத்மனாபபுரம் அரண்மனை பார்வையிட தடை!

இந்தியா சற்றுமுன் சுற்றுலா லைஃப் ஸ்டைல்
padmanabapuram palace - 2026

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மறு அறிவிப்பு வரும் வரை பத்மனாபபுரம் அரண்மனையில் பார்வையாளர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதி, தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்குச் செல்பவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இருந்து சபரிமலை, ஆரியங்காவு, அச்சங்கோவில் உள்ளிட்ட ஐயப்பன் தலங்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்று வருவர். அடுத்த வாரம் சபரிமலை நடை மாத பூஜைக்காக திறந்து வைக்கப் பட்டு, பூஜைகள் நடைபெறும் நிலையில், பக்தர்கள் எவரும் வரவேண்டாம் என்று சபரிமலை தேவஸ்வம் போர்டு கேட்டுக் கொண்டிருக்கிறது.

தென்காசி மாவட்ட பகுதிகளில் இருந்து பத்தனம்திட்ட மாவட்டத்திற்கு ( அதிலும் ராணி மற்றும் பத்தனம்திட்ட ஊருக்கு) பயணம் செய்தவர்கள், குறிப்பாக கடந்த இரண்டு வாரத்திற்குள் வந்து போனவர்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படுமாயின் உடனே தமிழக சுகாதாரத்துறையின் உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கேரளத்தின் சுற்றுலாப் பகுதிகளுக்கும் மக்கள் இன்னும் சில நாட்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.