December 5, 2025, 11:21 PM
26.6 C
Chennai

அதிர்ச்சி… அராஜகம்! மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்ன முதியவர் அடித்துக் கொலை!

govindarar modi vote - 2025

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் கோவிந்தராஜன் என்ற முதியவர். அவர் செய்தது பெரும் குற்றம் எல்லாம் இல்லை… மோடிக்கு ஓட்டு போடுங்க என்று அவராகக் கேட்டதுதான்!

தஞ்சையில் படு பயங்கரமான நிகழ்வாக, திமுக., திக., மதிமுக., உள்ளிட்ட கொலை வெறி பிடித்த மனிதநேயமற்ற கட்சிகளின் வெறித்தனமான பேச்சுக்களால் மூளை மழுங்கடிக்கப் பட்ட நபர்கள் அதிகமாகியுள்ளனர் என்பதற்கு சாட்சியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கின்றனர் அங்குள்ளவர்கள்.  மோடி படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு வாக்கு கேட்ட முதியவர் கொடூரமாக அடித்தே கொலை செய்யப் பட்டுள்ளார் என்பது அதற்கு சாட்சியாக விளங்குகிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடைப் பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார்.

இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜக கட்சியில் சேராவிட்டாலும்,  அண்மைக்கால பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கண்டு மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்..

இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தவர், அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அவரால் இயன்ற அளவுக்கு மோடி, எம்ஜிஆர்., ஜெயலலிதா படங்களை தன் சட்டையில் குத்திய படி, பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்று வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார்.  அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது, அங்கு வந்த ஒரத்தநாட்டை அடுத்த கண்ணத்தங்குடி மேலையூரைச் சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. திமுக., திக., மதிமுக, உள்ளிட்ட கட்சிகளின் மோடி எதிர்ப்புப் பிரசாரத்தில் மூளை மழுங்கிப் போய், வெறி உச்சத்தில் ஏறிய நிலையில், ஆத்திரம் அடைந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார்.

முதியவரான கோவிந்தராஜ், உடல் நிலை தளர்ந்து வலி தாளாமல் அலறித் துடித்தார். சற்று நேரத்தில் அவர் மயங்கிச் சரிந்துள்ளார்.  இதனால் அதிர்ச்ச் அடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து முதியவரின் மகள் அற்புத அரசு ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர். மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஆர்வலரை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு திரண்டனர். இதையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மோடி எதிர்ப்பு பிரசாரம் ஒரு பஸ் டிரைவரின் மூளையில் எத்தகைய வெறியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இதில் இருந்து தெரியவருகிறது என்கின்றனர் சமூக வலைத்தளங்களில். இது போன்ற ரத்த வெறி பிடித்த திராவிட இயக்கக் கட்சிகளின் மூளையை முடக்கும் பிரசாரத்துக்கு முதியவர் கோவிந்தராஜின் அரசியல் படுகொலை ஒரு சான்றாக அமைந்துவிட்டது என்கின்றனர் இந்தப் படுகொலையை வேடிக்கை பார்த்த ஒரத்தநாடுவாசிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories