கொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா? மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை!

அடடே... அப்படியா? கோவை சற்றுமுன் சுய முன்னேற்றம் சென்னை நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
corona virus alert - 2026

வீட்டிலேயே அடைந்து கிடந்து மன உளைச்சலா?
காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். பெரியார் பல்கலைக்கழகம் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் விதமாக முன்னெடுத்துள்ள முயற்சி இது. @PeriyarUnivers2

கொரோனா வைரஸ் வீதி தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது. தொற்று நோய் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசுத்துறை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் பாடுபட்டு வருகிறார்கள்.

இந்த நோய் குறித்து மக்களிடையே ஒருவித அச்ச உணர்வும் பெரும் பதற்றமும் ஏற்பட்டு வரும் நிலையில், பலரும் மன நல சிக்கல்களால் பாதிக்கப் படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எனவே வைரஸ் குறித்து பொய்யான தகவல்களால் ஏற்படும் மனக் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் மக்களுக்கு உதவ சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அதன் உளவியல் துறை மூலம் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த நோய் பீதியால் மனநிலை சிக்கலை எதிர்கொண்டுள்ள மக்கள் எங்கள் நிபுணர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9443496299 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெறலாம்

இந்த காலகட்டத்தில் பின்பற்றவேண்டிய மனநல ஆலோசனை குறிப்புகளாக உளவியல் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளதாவது:

  • வைரஸ் பற்றிய ஊடகச் செய்திகளில் இருந்து சமூக விலகலை பின்பற்றுங்கள்
  • இதுவரை தாங்கள் அறிந்தவையே போதுமானது
  • இணையதளத்தில் நோய் குறித்த தகவல்களை தேவையில்லாத வகையில் தேட வேண்டாம்
  • இறப்பு விகிதம் குறித்த செய்திகளை எந்த வகையிலும் பரப்ப வேண்டாம்
  • அனைவருக்கும் மன வலிமை இருக்கும் என்று சொல்ல முடியாது அது அதீத மன அழுத்த நோய்க்கு வழிவகுக்கும்
  • முடிந்தால் மென்மையாக மெல்லிசையை கேட்கவும்
  • குழந்தைகளுடன் அமர்ந்து விளையாடுங்கள்; கதைகள் சொல்ல வேண்டும்; மேலும் அவர்கள் எதிர்கால குறிக்கோள்களை விவாதிக்க வேண்டும்
  • சரியான முறையில் அனைவரும் கை கழுவுவதை உறுதி செய்யவும்; மேலும் அனைவருக்கும் அதனை நினைவூட்டும் படி அலாரம் அல்லது துண்டுச்சீட்டு ஒட்டி வைக்கலாம்.
  • நேர்மறை மனநிலையை வளர்த்தெடுப்பது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். மாறாக எப்போதும் எதிர்மறை விளைவுகளையே சிந்தித்துக் கொண்டிருந்தால் அது எதிர்ப்பாற்றலைக் குறைக்கும்! இது வைரஸ் தொற்றுக்கு ஆதரவானதாகும்
  • நோய்த்தொற்று நிலை கெடுபிடிகள் நிலையானவை அல்ல
  • அரசின் பன்முகங்களும் தம் சக்தியை ஒருமுகப்படுத்தி செயலாற்றிக் கொண்டிருப்பதால் விரைவில் குணமாகும்
  • இதுவும் கடந்து போகும் என்ற வாக்கியத்தை அடிக்கடி மனதில் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் கூறினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.