பாசிப்பருப்பு டோக்ளா!

சமையல் புதிது நலவாழ்வு பொது தகவல்கள்
pasi paruppu - 2026

பாசிப்பருப்பு டோக்ளா

தேவையானப் பொருட்கள்

பாசிப்பருப்பு – 1/2 கப்,
பச்சைமிளகாய் – 2,
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்,
கடலைமாவு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
புளிப்பு தயிர் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
ஈனோசால்ட் (பழம் உப்பு) – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

அலங்கரிக்க…

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன்
(பொடியாக நறுக்கியது),
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்.

செய்முறை

pasi parupu tokla - 2026

பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையில் கடலை மாவு, சர்க்கரை, மீதமுள்ள தயிர், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் ஈனோசால்ட் சேர்க்கவும்.

ஈனோசால்ட் சேர்த்தவுடனே எண்ணெய் தடவிய தட்டில் அந்த மாவை ஊற்றி 15 நிமிடங்கள் நீராவியில் வைக்கவும். தோக்கலா வெந்தவுடன் துண்டாக வெட்டவும். பிறகு எண்ணெயை காய வைத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தும் டோக்ளா மீது சேர்க்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.