கொரோனா நிவாரண நிதியாக ரூ.12 லட்சம் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
thiruvadudurai thambiram corona help fund - 2026

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 12 லட்சம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஆதீனத்தின் சார்பில் வெளியான தகவலில், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக, ரூபாய் பன்னிரெண்டு லட்சத்திற்கான காசோலையை மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் வ.மகாராணியிடம் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் குத்தாலம் வட்டாட்சியர் J.ஜெனிட்டா மேரி, திருவாவடுதுறை கிராம நிர்வாக அலுவலர் S.சுவாமிநாதன், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன தம்பிரான் சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன பொது மேலாளர் சுப்ரமணியன், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன காசாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்… என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.