தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு 24 ஆக உயர்வு!

சற்றுமுன் சென்னை தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
corona dead body 1

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதியானது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 25 பெண்களும், 39 ஆண்களும் அடங்குவர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுக் கண்காணிப்பில் 29056 பேரும், அரசு கண்காணிப்பில் 26 பேரும் உள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 60 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 1020 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 24.

மதுரையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி ஆனதால், மொத்த எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுவரை 59 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

திருவள்ளூர், சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டது.

கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்!
சென்னை – 523
கோவை – 141
திருப்பூர் – 112
திண்டுக்கல் – 80
மதுரை – 75

மதுரையில் இன்று 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் அதிகம் பாதிப்பை சந்தித்த மாவட்டங்களின் வரிசையில் 5ம் இடத்திற்கு வந்துள்ளது!

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.