“வருவாய் அருள்வாய் குகனே!”

Published:

“வருவாய் அருள்வாய் குகனே!”-

“வார்த்தைகளில் புகுந்து விளையாடும் பெரியவா”

( வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க என்ற அடியாருக்கு ஹாஸ்யமாக உபதேசித்த மந்திரமும், அனுகிரஹமும்).

[பெரியவாளை ரா.கணபதி ஸ்ரீசரணர் என்றே விளிப்பார்]
ரா.கணபதி எழுதியதுதட்டச்சு-வரகூரான் நாராயணன்.07-01-2013 போஸ்ட். மறுபதிவு.

(மெம்பர்களுக்காக அப்பாடல்)
51. உருவாய் அருவாய்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.




.அடியார்—- : வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க. பாராயணத்துக்குப் பெரியவங்க ஏதாவது ஸோஸ்தரம் [ஸ்தோத்திரம்} சொல்லணுங்க.

ஸ்ரீசரணர்…: நீதான் முருக பக்தனாச்சே, தினமும் ‘[கந்தர்] அனுபூதி’ சொல்றவனாச்சே! அதுக்கு மேலே புதுசா என்ன பாராயணம் பண்ணணும்கிறே?

அடியார்: [சற்று நேரம் முகதைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்துவிட்டு} அது ஞான நூலான்னாங்க இருக்கு? நமக்கோ அன்னாட அல்லாட்டத்துல வருமானம்னா தேவையாயிருக்கு!

ஸ்ரீசரணர்: [கணமும் யோசியாமல், குமிண் சிரிப்புடன்] ஸரி, அதுல கடைசி வரி என்ன?

அடியார்: “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!”

ஸ்ரீசரணர்: “வருவாய்”னாலும் வருமானம்தானே? ‘வருவாய் அருள்வாய்’னே வரதே! அதுவும் முடிஞ்சு முடிவா ஸ்தோத்ரத்தின் ஈற்றடியிலே வரதே! அதையே சொல்லிண்டிரு, போறும்.

வார்த்தைகளில் புகுந்து விளையாடும் அவரது வித்தகத்துக்கும் ஒரு சான்று

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.05 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img