இலங்கை வடக்கில் மதமாற்ற சபையினருக்கு எதிராக சிறப்பு விசாரணை தேவை: மறவன்புலவு சச்சிதானந்தம்!

உலகம் லைஃப் ஸ்டைல்
maravanpulavu sachithanandam
maravanpulavu sachithanandam

இலங்கை வடக்குப் பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக சிறப்பு ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று, யாழ் அரியாலையில் உள்ள பில் தெனியா ஆலயத்தின் முன்னர் வைத்து, செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் கூறிய போது… வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்த சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பில்தெனியா ஆலயமானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதி கொடுத்தது. நல்லூர் பிரதேச சபை என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. இந்த மத மாற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உள்ள கட்சியினர்தான் இந்த ஆலயம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்.

எனவே இது தொடர்பில் சிறப்பு ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.