ஜூன் மாதமும் விலையில்லா ரேஷன் பொருள்கள்: ஆட்சியர்களுடன் காணொளியில் முதல்வர் ஆலோசனை!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
edappadi video conference1
edappadi video conference1

வரும் 17ஆம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொளி உரையாடல் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்தாவது…

கொரோனா தாக்கம் படிப்படியாக உயர்ந்து பின்னர் தான் குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம்.

பொது மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனாவை கட்டுப்படுத்துவது எளிதல்ல. குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். எந்த அளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்களோ அந்த அளவிற்கு ஊரடங்கை தளர்த்தி இயல்பு நிலைக்கு வர முடியும்.

பொதுமக்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவ முடியுமோ அந்தந்த வகைகளில் அரசு உதவியது! தனிமனித இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.

மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று அனைத்து மாவட்டஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொளி உரையாடல் மூலம் பேசினார்.

முன்னதாக, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப, ரூ.83 கோடி ஒதுக்கி அரசாணை வெளிட்டது தமிழக அரசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.