தமிழகத்தில் இன்று 805 பேருக்கு! சென்னையில் மட்டும் 549 பேருக்கு பாதிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
china coronavirus
china coronavirus

தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 549 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த 93 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்று வெளியான சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 87 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இன்று, கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இன்று மட்டும் 407 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்த வந்த ஒருவர், கேரளாவில் இருந்த வந்த 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து தமிழ்நாடு வந்த 3 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு கண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா மொத்த பாதிப்பு 17,082 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் மொத்தம் 726 பேருக்கு கொரோனா இருந்தது கண்டறியப் பட்டது. அதே நேரம், தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 88% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

அதே நேரம், கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 84% பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிக்கை கூறுகிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 4.21 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாம்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 50% பேர் 6௦ வயதுக்கு மேற்பட்டவர்கள். நீரிழிவு, ரத்த அழுத்தம் ஏற்கனவே இருந்தவர்கள் என்றும், கொரோனாவால் அதிகளவில் (84%) உயிரிழப்பு என்றும் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.