முகக் கவசம் அணியாமல் வந்தோருக்கு அபராதம்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
police in madurai

மதுரை: மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் இல்லாமல் நடமாடியதாக ரூ. 6. 28
லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில் சாலைகளில் முகக் கவசம் இன்றி
நடமாடுவோர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர்களுக்கு
இதுவரை ரூ. 6. 28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் முகக்
கவசம் அணியாமல் வெளியே வருவோர் மீது போலீஸார் தொடர்ந்து
அபராதம் விதித்து வருகின்றனர்.

இருந்தபோதிலும், மதுரை அண்ணாநகர், சி்ம்மக்கல், கே.கே.நகர்,
கருப்பாயூரணி, பேரையூர், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர்,
பரவை, திருமங்கலம், மேலூர் ஆகிய பகுதிகளில் இன்னமும் சிலர்
வேலைக்கு செல்வோர் முகக் கவசம் இல்லாமல் பணிக்கு செல்வதை
காணமுடிகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு செல்லும் பெண்களில் பலர்

முகக்கவசம் அணிவதில் தயக்கம் காட்டுகின்றனர். சமயநல்லூர் பகுதியில்
பலர் முகக் கவசம் அணியாமல் 100 வேலை நாள் திட்டப்பணிகளில்
ஈடுபட்டனராம்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.