
விஸ்வகர்மா யோஜனா திட்டம் கீழ் 18 வகையான கைவினைக் கலைஞர்களை சந்தித்த தமிழக ஆளுநர்.
மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளன.- ஆளுநர் குற்றச்சாட்டு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்கீழ் 18 வகை கைவினை கலைஞர்களை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில்…
நீங்கள் தான் நாட்டின் உண்மையான கதாநாயகர்கள். விவசாயமும் தொழிலும் இல்லாமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. அதேபோல் நீங்கள் இல்லாமல் இந்த நாட்டில் எந்த பணிகளும் நடக்கப் போவதில்லை. இத்திட்டத்தை பிரதமர் தைரியமாக நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தை சில தலைவர்கள் கூட முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.
கவனிக்கப்படாமல் உள்ள துறைகளை பிரதமர் கவனித்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். பொறியாளர்கள் விஸ்வகர்மாகள் தான் புனிதமான ஆத்மா. நாட்டை சிறப்பாக கட்டமைத்தவர்கள் விஸ்வகர்மா. தலைசிறந்த கலைஞர்களாக நிகழ்பவர்கள்.
உறுதியான பாரதம் உருவாக விஸ்வகர்மாக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட போது முதலில் பாராட்டு தெரிவித்தது விஸ்வகர்மாவினர் களைத்தான்.
பொறியாளர்கள் திட்டமிட்டு கொடுத்தாலும் அதை வியர்வை சிந்தி சிறப்பாக செயல் வடிவம் கொடுப்பது நீங்கள் தான். இத்திட்டத்தின் முழு நோக்கம் உங்களது வாழ்வாதாரம் மேம்பாடு அடைவதுடன் சமுதாயத்தில் உயர்ந்த பங்கையும் வைக்க வேண்டும் என்பதுதான். சிலர் எல்லாவற்றையும் இங்கு அரசியலாக பார்க்கிறார்கள்.
தவறான தகவலை பரப்புகிறார்கள். குலக்கல்வி திட்டம் என்பது தந்தை பார்த்த தொழிலை மகன்தான் பார்க்க வேண்டும் என்று பரப்புகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது. பின் தங்கியவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டும்.
குடிநீர் திட்டம், மின்சார திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்காக அமல்படுத்தப்படுகிறது. எந்த திட்டத்திலும் வேறுபாடு காட்டப்படுவதில்லை. பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை அரசியல் நோக்கோடு சந்திக்கக்கூடாது.
மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 40 சதவிகித நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. மாநில முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்.
மக்களிடம் நினைத்த தொழிலை தொடங்குவதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. உங்கள் பிரச்சனைகளை அறிந்து கொண்டேன். என் குடும்பத்தில் ஒருவராக உங்களை பார்க்கிறேன். மத்திய, மாநில அரசுகளிடம் எடுத்துச் சென்று உங்கள் குறைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்வேன் என்றார்.
தமிழகத்தில் பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஒரு பெண் பஞ்சாயத்து தலைவியாக 2 ஆண்டுகளுக்கு முன் தேர்வு செய்யப்பட்டு இதுவரை பதவி ஏற்காமல் இருப்பதை நான் நாளில் படித்தேன் இதுதான் தமிழக அரசின் சமூக நீதியான கேள்வி எழுப்பினார் இந்நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, விஸ்வகர்மா நிர்வாகிகள், பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னததாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பொதுமக்களை காலை 9 மணி முதல் மண்டபத்தில் அடைத்து வைத்து குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் இருந்த நிலையில் பொதுமக்கள் ஆத்திரத்துடன் குடிநீர் எங்கே என கேள்வி எழுப்பி குடிநீர் பாட்டிலை பெறுவதற்காக ஒரு ஒருவரை முந்தி அடித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த புதிய தமிழகம் கட்சியினர் வந்திருந்த நபர்களுக்கு தண்ணீர் உணவு கூட ஏற்பாடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .பலர் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்
- கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவை உலகம் உற்றுபார்கிறது. பாதுகாப்புத் துறையில் கடந்த காலங்களில் 18000 கோடி ரூபாய் அளவில் ,இந்தியாவில் உற்பத்தி நடந்தது.
- பிரதமரின் உறுதியும் உறுதியும் அரசியல் அக்கறைக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலனுக்காக உயர்கிறது.
- கடந்த காலங்களில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்த பிரதமர் வருவதற்கு முன்பு நிதியமைச்சர் சொல்வதைக் கேட்டோம்.
- சுகாதாரக் கல்வி உள்கட்டமைப்பு குடிநீரை ஒவ்வொரு வீட்டிற்கும் சமையல் எரிவாயு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆயுஷ்மான் திட்டத்தில் பயன் அடைகிறார்கள்.
- பல மாநிலங்களின் பெரிய மாநிலங்களை விட தமிழகத்தில் ரயில்வேயில் 35,000 கோடி முதலீடு தமிழகத்திற்கு உள்ளது.
- இங்குள்ளவர்களான தீப்பெட்டி, பட்டாசு , பேப்பர், பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டாலும் நீங்கள் அனைவரும் நாட்டுக்கு பெரும் சேவை செய்து வருகிறீர்கள்.
- இன்று பிரச்சனையில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் பற்றிய பிரச்னையை கேள்விப்பட்டேன், ஏனென்றால் பெரிய பிரச்னைகளுக்கு நீதிமன்றங்கள் உட்பட பல தடைகளை ஏற்படுத்தி உள்ளன.
- ஒரு தொழிலை நாடு முழுவதும் உள்ள 100 கோடி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பட்டாசு உள்ளது. அதில் உள்ள கட்டுப்பாடுகள் நியாயமற்றவை அகற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்…
- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி