
அஜித் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக பெரும் பொருட்செலவில் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே யோகிபாபு, தம்பி ராமையா ஆகிய காமெடி நடிகர்கள் நடிக்கவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்துள்ளர் ரோபோ சங்கர்
ரோபோசங்கருக்கு இதுவரை நடித்திராத வகையில் காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர் என்றும், அஜித்துடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக அவர் 50 நாட்கள் கால்ஷீட்டை மொத்தமாக கொடுத்துள்ளாராம். இதில் பெரும்பாலான நாட்கள் அஜித்துடன் நடிக்கவுள்ள காட்சிகள் என்பதால் ரோபோசங்கர் உற்சாகத்தில் உள்ளார்.



