பெரியார்… இவர்தான் தமிழர் தலைவர்!

உரத்த சிந்தனை பொது தகவல்கள்

periyar on communism stay away from communism e1520530816957 - 2026

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் 27.8.1971 அன்று பெரியார் உரையாற்றினார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் உதிர்த்த முத்துக்களில் சில:

1. …என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகள் இருந்திருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து நமக்குச் செய்தது என்ன?

2. யார் இந்து என்று ஒப்புக் கொள்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்தரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்க தமிழ்த்தாய் செய்தது என்ன?

3. இங்கிருக்கும் மாணவர்கள் பலர் நெற்றியில் சாம்பலடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் இங்குள்ள ஆசிரியர்கள் தான். அவர்கள் அறிவற்றவர்கள் என்பதையே காட்டுகிறது.
4. நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளாகும்.

பெரியார் ஒதுக்கித் தள்ளச் சொன்ன தமிழ் இலக்கியக் குப்பைகள்:
சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், கம்பராமாயணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பாரதி, இன்னபிற.

திருவள்ளுவரையாவது ஒப்புக் கொள்கிறாரா?

“தமிழனுக்கு பாராட்டத்தக்க இலக்கியம் என்ன இருக்கிறது? வள்ளுவனைச் சொல்வார்கள். அவன் 2000 வருஷ காலத்து மனுஷன். இன்றுள்ள அறிவு வளர்ச்சிக்கு அவனா நமக்கு வழிகாட்டியாக இருப்பது? (13.11. 70)

அவ்வையார்?

“அவள் ஒரு முட்டாள். அழுக்கு மூட்டை.”

இவர்தான் தமிழர் தலைவர்!

தகவல்: அனந்தகிருஷ்ணன் பட்சிராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.