‘காட்மேன்’க்கு எதிராக அந்தணர் முன்னேற்றக் கழகம் கோவையில் புகார்!

கோவை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
amk coimbatore
amk coimbatore

கோவை: காட்மேன் என்ற திரைப்படத்தின் மூலமாக ஆன்லைனில் அந்தணர் பெண்களை இழிவுபடுத்தும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

ஜி 5 ஆன்லைன் சேனலில் அந்தனர் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் காட்மேன் என்ற திரைப்படம் ஒளிபரப்ப இருக்கின்றனர். அதன் முன்னோட்டமாக வெளியிடப்பட்டுள்ள ட்ரைலரில் அந்தணர்களை இழிவு படுத்தும் நோக்கில் உள்ளதை கண்டித்து அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அந்தனர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் செல்வம் பேசுகையில் ஜி 5 ஆன்லைன் சேனலில் காட்மேன் என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாகவும், அதன் முன்னோட்டமாக வெளியிடப்பட்ட டிரைலரில் அந்தணர்களை இழிவுபடுத்தும் நோக்கில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

அந்தணர்களை இழிவுபடுத்தும் நோக்கில் டிரைலர் வெளியிட்ட காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது மத ரீதியாக இரு பிரிவுகளுக்கிடையே பகைமையை தூண்டுதல், மத நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுதல், பொய்யான வதந்திகளை பரப்பி மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியக்கோரி மனு அளித்தனர்.

amk coimbatore
amk coimbatore

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.