
சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு முடிந்த பின்னர் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்போது தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கைகளுக்கு பதில் கால் விரல்கள் மூலம் இயக்கப்படும் லிப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கைகளால் லிப்ட்களை இயக்கும்போது தொற்று பரவும் அபாயம் உள்ளதால், லிப்ட்களை இயக்குவதற்காக இந்த மாற்று வழியை செயல்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை அலுவலகத்தில் இந்த லிப்ட் நடைமுறைக்கு வந்துள்ளது. இதேபோன்று அனைத்து ரயில் நிலையங்களிலும் காலால் இயக்க கூடிய லிப்ட் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.