திருடப் போகும் போது சாமி மாதிரி கூட்டாளிகளை கூட்டிப் போனால், அவர்களே காட்டிக் கொடுப்பார்கள் என்பதை நிரூபிக்கிறது லூயி சோஃபியாவின் தந்தை சாமியின் தந்தி டிவி பேட்டி! எங்களது அனைத்து சந்தேகங்களையும் இந்த பேட்டி மூலம் தீர்த்து வைத்த சாமிக்கு நன்றி.
இது அரசியலே தவிர வேறில்லை.
இதில் பின்னிருந்து இயக்கியவர்கள் யார் என்பதை தமிழக அரசு விசாரிக்க வேண்டும். ஹிந்து தலைவர்கள் குறி வைத்து தாக்கப்படுவது இதோடு முடித்து வைக்கப்பட வேண்டும்.
குறிப்பு: பேட்டி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பின்னிருந்து ஒரு பெண்மணியின் குரல், “வாங்க மச்சான் போதும். போன் வந்திருக்கு. முடிச்சிடுங்க” என்றதும் சாமி பேட்டியை முடிக்கிறார். “பேட்டியாய்யா இது? லூசு மாதிரி உளறி கொட்டிட்டியேய்யா.. இது வரை நீர் உளறினதுக்கே சமூக வலைதளத்தில கழுவி ஊத்துவானுக சங்கிகள். இதுக்கு மேலயும் பேசினா டப்பா டான்ஸ் ஆடிடும். பேட்டியை முடிச்சு தொலை” என்பது இந்த பேட்டியை காண்பவர்களுக்கு புரியும்
தந்தி கேள்வி : இதற்கு முன் இந்த மாதிரி விமானத்தில் கத்தியிருக்கிறாரா?
சாமி பதில் : இல்லை. அவளோட ஃபீலிங்ஸை எக்ஸ்பிரஸ் பண்ணியிருக்கா.
தந்தி கேள்வி : அதை வெளிக்காட்ட இடம்னு ஒண்ணு இருக்குது. விமானத்தில் கத்தலாமா? விமானத்துக்குன்னு சில பாதுகாப்பு விதிகள் இருக்கிறது. அந்த விதிகள் தெரியாமலா கனடா சென்று படித்து வருகிறார்? ஒரு ஆராய்ச்சி மாணவிக்கு விமான விதி தெரியாமல் கத்திட்டாங்கன்னா சரியா இருக்குமா அது?
சாமி பதில் : அவள் சயன்ஸ் படிச்சிருக்கா. சட்ட அறிவு அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை.
தந்தி கேள்வி : விமானத்துக்குள்ள என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.
சாமி பதில் : சோஃபியா விமானத்தில் கத்தினப்புறம் அந்தம்மா (தமிழிசை), யார் கத்தினது என முகத்தை மட்டும் பாத்துட்டு ஒண்ணும் சொல்லாம போயிட்டாங்க. விமானத்தில என் மகள்ட்ட எதுவும் பேசலை. ஏர்போர்ட்டுக்கு வெளியே போய் சுத்திட்டாங்க எங்களை அடிக்க வர்ற மாதிரி பேசினாங்க. கொலை மிரட்டல் பண்ணின மாதிரி இருந்தது. நாங்க இந்த பிரச்சினையை பெருசாக்க வேண்டாம்னு நெனச்சப்போ அவங்க எங்க மேல கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டாங்க.
[சாமி ஒப்புக் கொள்கிறார் சோஃபியா விமானத்தில் வைத்து கத்தியதை]
தந்தி கேள்வி : உணர்ச்சி வசப்பட்டு கத்திட்டாங்கன்னு சொல்றீங்க. ஆனா அவங்க கத்தறதுக்கு முன்னாலயே ட்விட்டர்ல “பாஜக தலைவர் எங்களோட பயணிக்கிறார். நான் இந்த மாதிரி கத்தப்போறேன். என்னை விமானத்தை விட்டு இறக்கிடுவாங்களான்னு” ட்வீட் பதிவை போட்டுட்டு கத்தியிருக்கிறார். அப்ப இது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று தானே நாம பார்க்கணும்?
சாமி பதில் : இல்லை. அப்படி ஒரு ட்வீட்டும் இல்லை. ப்ரீ ப்ளாண்டும் இல்லை. ட்வீட் இருந்த மாதிரி எனக்கு தெரியலை சார்.
தந்தி கேள்வி : விடுமுறைக்கு வந்தவங்க இந்த மாதிரி பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு இதெல்லாம் தப்பு, இம்மாதிரில்லாம் பண்ண கூடாதுன்னு அறிவுரை சொன்னீங்களா?
சாமி பதில் : ஆமா. எங்களுக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. எந்த தீவிரவாத இயக்கமும் எங்களுக்கு கெடையாது. அதனால அவள ஹையர் ஸ்டடீஸ் நன்றாக படிக்கணும்னு தான் அட்வைஸ் பண்ணியிருக்கிறேன் நான்.
[இன்னுமொரு ஒப்புதல் – தவறு செய்துவிட்டார் என்று]
தந்தி கேள்வி : (3:37இல்) எந்த பின்புலமில் இல்லங்கறீங்க. ஆனால் நீங்க கொடுத்திருக்கிற எதிர் கம்ப்ளெயிண்ட்ல ரெண்டாவது வரிலயே வருது, ‘நான் இந்த ஜாதியை சார்ந்தவன்’னு. இந்த இடத்தில ஜாதி எங்க வந்தது? ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அந்த சம்பவத்தை விசாரிக்காம ஜாதியை ஏன் உள்ளே கொண்டு வர்றீங்க?
சாமி பதில் : அதாவது.. ஒரு விஷயம் நான் சொல்றேன். இந்த அம்மா (தமிழிசை) வந்து தென்காசிக்கு போறாங்க. தென்காசி போறது எதுக்குன்னா தேவேந்திர குல மக்களை பிஜேபி அரசில சேர்க்கும் ஒரு நோக்கத்தோட அந்த மீட்டிங்குக்கு போறாங்க. ஒரு பக்கம் தேவேந்திர குல மக்களை பிஜேபி-இல சேக்கணும்னு நெனைக்கறாங்க. இன்னொரு பக்கம் தேவேந்திர குல மக்களுக்கு விரோதமா போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்து நடவடிக்கை எடுக்கறாங்க. இது பொது மக்களுக்கு தெரியணும். தேவேந்திர குல மக்களுக்கு அது புரியணும் அப்படீங்கறதுக்காக அதை நான் (கம்ப்ளெயிண்ட்டில்) சொல்லிருக்கேன்.
தந்தி கேள்வி : இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை. ரெண்டு நபர்களுக்கிடையிலான பிரச்சினை. அங்க நீங்க ஜாதியை கொண்டு வர்றீங்கன்னா நீங்க ஜாதி ஆதரவை தேடறீங்க அல்லது ஜாதி ரீதியாக அணுகறீங்கன்னுதானே அர்த்தம்?
சாமி பதில் : இல்லை இல்லை. ஜாதி ஆதரவு எங்களுக்கு தேவையில்லை. இவங்க போன நோக்கம் ஜாதி நோக்கத்தோடதான் (தென்காசி) போயிருக்காங்க. தேவேந்திர குல மக்களை தன் பக்கம் இழுக்கணும் அப்படீங்கற ஒரு நோக்கத்தில போயிருக்காங்க.
இந்த நேரத்தில் பின்னிருந்து ஒரு பெண்மணியின் குரல், “வாங்க மச்சான் போதும். போன் வந்திருக்கு. முடிச்சிடுங்க” என்றதும் இவர் முடிக்கிறார்.
– இந்த கேப்மாரித்தனத்தால் உமது மகளது பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் உள்ளது. இனி எப்ப கேஸ் முடிஞ்சு எப்ப கனடா போறது?
– போராடணும்னு அரிப்பு ஏற்பட்டால் அதை சட்டப்படி செய்ய வேண்டும். சட்டத்தை மீறி செய்ய கூடாது. உமது மகளுக்கு முழுக்க முழுக்க நக்சல் தொடர்பு. அதை சரி செய்து தமிழிசையிடம் மன்னிப்பு கேட்டு வழக்கை வாபஸ் வாங்க சொல்லுங்கள். உமது மகளை தன் எதிர்காலத்திலும் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த சொல்லுங்கள்!
– ஹிந்து தலைவர்கள் குறி வைத்து தாக்கப்படுவது இதோடு முடித்து வைக்கப்பட வேண்டும்.





their family have DMK bakcround only. to become panchayath board president, they killed directly and indirectly 3,4 opposition peoples since 1996. and i wonder now they talking freedom of speech..
he is christian but still claiming jadhi , why ? still he receiving benefit of jadhi this is illegal.