நிவாரண உதவி வழங்க… வீடு வீடாக வரலைங்க: மதுரை மக்கள் புகார்!

Published:

ration shop worker
அரசு உத்தரவை மதித்த ரேசன் கடைக்காரர்: மதுரை சிங்காரதோப்பு தெருவில் வீடூ, வீடாக சென்று ரூ. 1000 நிவாரனத்தொகையை விநியோகிக்கும் ரேசன் கடைக்காரர்.

மதுரையில் வீடு வீடாக நிவாரண உதவிகள் வழங்க ரேசன் கடைக்காரர்கள் முன்வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை நகரில் பல கடைகளில் அரசு அறிவித்த ரூ. 1000 பணத்தை வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடங்களில் வைத்து வழங்குவதால் கூட்டம் மிகுந்து தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாம்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஊரடங்கு பகுதிகளில் அரசு சார்பில் ரூ. 1000 ரேசன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் , மதுரை நகரில் பெரியார் பஸ்நிலையம் திடீர் நகர், அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், யாகப்பநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000.த்தை வீடுகளுக்கு சென்று ரேசன் கடையின் விற்பனையாளர்கள் வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடத்தில் வைத்து வழங்குவதால், கூட்டம் மிகுந்து தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், அரசு நிவாரனத் தொகையை வீடுகளில் வழங்க உத்தரவிட்டும், இதை பொருட்படுத்தாத ரேசன் கடையின் விற்பனையாளர்கள் பலர் கடைகளின் வாசல், பொது இடங்களில் போலீஸார் இன்றி வழங்குவதால் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இதை, மாவட்ட விநியோக அலுவலர், வட்ட விநியோக அலுவலர் மற்றும் கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர்கள் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்பதே, பொது மக்களின் வேண்டுகோள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img